காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய செய்தி!.. 1 to 5th Govt School Students Marks Entry TNSED App

1 to 5th Govt School Students Marks Entry TNSED App

காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய செய்தி!..

1 to 5th Govt School Students Marks Entry TNSED App தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையானது முடிந்து நாளை பள்ளிகள்(07/10/2024) திறக்கப்பட உள்ளன.

1 to 5th Govt School Students Marks Entry TNSED App

இதனை ஒட்டி ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் அனைத்துமே படுத்துவது முதல் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது வரை அனைத்து விதமான பணிகளும் முறுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது இறுதி கட்டத்தை எட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 2024- 25 ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் முதல் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை tnsed செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதன் அடிப்படையில் விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை கேள்வி வாரியாக டிஎன்எஸ்இடி செயலில் உள்ளீடு செய்ய வேண்டும். இதற்கான கடைசி தேதி அக்டோபர் 9 ஆகும். இது தொடர்பான வழிகாட்டுதல்களை வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

முதலில் TNSED செயலில் எமிஸ் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூல உள் நுழைய வேண்டும். அதில் எண்ணும் எழுத்தும் (EE) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு Summative கிளிக் செய்து வகுப்பு மற்றும் பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். உடனே தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் காட்டப்படும்.

அதில் Not Assessed என்ற Status இருக்கும். இதையடுத்து Record ஆப்ஷனை கிளிக் செய்து ஒவ்வொரு மாணவருக்கும் வினாக்கள் வாரியாக பெற்ற மதிப்பெண்களை பூர்த்தி செய்ய வேண்டும். உடனே Completely Filed என மாறிவிடும். இறுதியாக Final Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

ஒருவேளை நீண்ட நாட்களாக மாணவர்கள் வரவில்லை எனில் Long Absent கிளிக் செய்து அந்த மாணவரை ஸ்கிப் செய்யலாம். இதில் ஏதாவது தவறுதலாக குறிப்பிட்டு விட்டால் மீண்டும் திருத்தும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது

Leave a Comment