தமிழக அரசு வழங்கும் நூலகர் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.24,200 Information And Public Relation Recruitment 2024 Librarian

Information And Public Relation Recruitment 2024 Librarian

தமிழக அரசு வழங்கும் நூலகர் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.24,200

Information And Public Relation Recruitment 2024 Librarian தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லநாடு வீரன் வளையம் தேவன் மணிமண்டபம், கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம், காட்டாங்குளம் வீரன் அழகு முத்துக்கோன் மணிமண்டபம் ஆகிய மணி மண்டபங்களில் காலியாக இருக்கின்ற நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தெரிவிக்கப்பட்டுள்ளது ,எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுங்கள் ,மேலும் இப்பணியை குறித்து முழு விவரங்களும் கீழே விவரித்து வழங்கப்பட்டுள்ளது படித்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Information And Public Relation Recruitment 2024 Librarian
Information And Public Relation Recruitment 2024 Librarian

பணியிடத்தின் பெயர்

 நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) – 03 பணியிடங்கள்

ஊதியம்

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம் Rs.7,700 – 24,200/-  ஊதியம் வழங்கப்படும்

கல்வி தகுதி

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science (CLIS) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

BC/MBC – 18 to 34 years

SC – 18 to 37 years

தேர்வு செய்யும் முறை

  •  நேர்காணல் மூலம் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து  விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவ பகுதி, சாதி சான்றிதழ் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் மணிமண்டபத்தின் பெயரை குறிப்பிட்டு உரிய சான்றுகளின் நகல்களுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்புங்கள்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கட்டாயம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்த சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Apply Last Date:18/10/2024

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தூத்துக்குடி மாவட்டம் – 628101 என்ற முகவரிக்கு 18.10.2024 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-Click Now

Apply Form Link-Click Now

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Now

Leave a Comment