PM கிசான் ரூ.2000 -18வது தவணை வந்தாச்சு!- வெளியான ஹேப்பி நியூஸ்!! PM Kisan 18th Installment Released Oct 5

PM Kisan 18th Installment Released Oct 5

PM கிசான் ரூ.2000 -18வது தவணை வந்தாச்சு!- வெளியான ஹேப்பி நியூஸ்!!

PM Kisan 18th Installment Released Oct 5 பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6 ஆயிரம் மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு நிதியாக இத்திட்டத்தின் வாயிலாக வழங்கப்படுகிறது. இப்பணம் நேரடியாக இல்லாமல் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

PM Kisan 18th Installment Released Oct 5

ஒன்றியத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் கோப்பில் முதல் கையொப்பம் இட்டார். நரேந்திர மோடி. இதனையடுத்து இத்திட்டத்தின் 17வது தவணையாக ரூ. 2000 விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

சிறு, குறு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் விதமாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் உள்ளிட்ட எந்த இடையூறும் இல்லாமல் நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுவது, இத்திட்டத்தின் மிகப்பெரிய நன்மையாக இருக்கிறது.

விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி”

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 18வது தவணைக்கான 20,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.

இதுவரை 17 தவணைகளாக இந்த தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்துக்கான 18வது தவணை தொகை விடுவிக்கப்பட்டது.

Leave a Comment