வெறும் ரூ.100 கட்டினால் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?..
Post Office RD Scheme Info Tamil 2024
Post Office RD Scheme Info Tamil 2024 அஞ்சலக திட்டங்கள் என்றாலே சாமானியர்கள் விரும்பும் ஒரு திட்டமாக இருந்து வருகின்றது. குறிப்பாக அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம் என்பது மிக விருப்பமான திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் அஞ்சலகம் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் என்பதால், மிக நம்பிக்கையானதாகவும் பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு 6.7% வட்டி வழங்கி வருகிறது. மேலும், இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என்றாலும், முதிர்வு காலம் முடியும் போது நீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்கலாம். அதுமட்டுமின்றி, இதில் மைனர் கணக்கையும் தொடங்கலாம். ஆனால், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயர் மற்றும் டாக்குமெண்டை பதிவு செய்வது அவசியமாகும். மேலும், இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு ரூ.100 தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
உதாரணமாக, இப்போது நீங்கள் மாதந்தோறும் ரூ.5000 முதலீடு செய்கிறீர்கள் என்றால், அது 5 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு முதலீடு தொகையாக ரூ.3,00,000 கிடைப்பதோடு, வட்டி வருமானம் ரூ.56,830-ஐ சேர்த்து மொத்தமாக உங்களுக்கு 3,56,830 ரூபாயாக கிடைக்கும். மேலும், RD திட்டங்களில் வட்டி வருமானமானது 10,000-க்கு மேல் இருக்கும் பட்சத்தில், TDS கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.