Youtube சேனலை எவ்வாறு உருவாக்குவது குறித்து தமிழக அரசு பயிற்சி அறிவிப்பு -வாங்க விண்ணப்பிக்கலாம்!.. Youtube Channel Creation Marketing Training 2024

Youtube சேனலை எவ்வாறு உருவாக்குவது குறித்து தமிழக அரசு பயிற்சி அறிவிப்பு -வாங்க விண்ணப்பிக்கலாம்!..

Youtube Channel Creation Marketing Training 2024

 தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் youtube சேனலை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் தொடர்பான சான்றிதழுடன் கூடிய பயிற்சி குறித்து அறிவிப்போடு வெளியிடப்பட்டுள்ளது.Youtube Channel Creation Marketing Training 2024 இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது குறித்து கீழ்க்கண்ட தொகுப்பில் காணலாம்.

Youtube Channel Creation Marketing Training 2024
Youtube Channel Creation Marketing Training 2024

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனம் சார்பில் சென்னையில் யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பான பயிற்சியானது வருகின்ற 16/ 10/ 2024 முதல் 18 /10/ 2024 வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் 5.45 மணி வரை நிறுவனத்தின் கட்டிட வளாகத்தில் நடைபெற உள்ளது.

சொந்தமாக youtube சேனலை உருவாக்குதல் வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம் சமூக ஊடக சந்தைப்படுத்துதல் சமூக ஊடகங்களை இணைத்தால் வாடிக்கையாளர் வளையமைப்பு எவ்வாறு அதிகரிப்பது பயனுள்ள சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு, ஆன்லைன் மார்க்கெட்டிங், Domain  மற்றும் போஸ்டிங் இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் சைபர் குற்றம் பாலிசி மற்றும் விதிகள் ஆகியவற்றின் தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பயிற்சியில் youtube சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான நேரடி பயிற்சி வகுப்பின் மூலமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் ஆண் பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வி தகுதியான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் பயிற்ச்சியில் பங்குபெறும் ஆண் பெண் மற்றும் திருநங்கைகள் தங்கை பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதியும் உள்ளது. தேவைப்படுவோர் இதற்கும் விண்ணப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் இப் பயிற்சி பற்றிய விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் முகவரி தொலைபேசி கைபேசி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.

தொடர்பு எண் – 8668 100181 / 9841 336033. முன்பதிவு அவசியம், பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.”

Official Website- Click Now

Leave a Comment